/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
10ம் வகுப்பு பொது தேர்வு;153 பேர் 'ஆப்சென்ட்'
/
10ம் வகுப்பு பொது தேர்வு;153 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 28, 2025 09:11 PM
ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் நடந்த, 10ம் வகுப்பு பொது தேர்வில், 153 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். நீலகிரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, 58 மையங்களில் நடக்கிறது. அதில், '3,497 மாணவர்கள், 3,320 மாணவியர்,' என, மொத்தம், 6,817 பேர் தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வுகள், 126 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு பணியில், '58 முதன்மை கண்காணிப்பாளர்கள், 58 துறை அலுவலர்கள், 116 அலுவலக பணியாளர்கள், 439 அறை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள், 23 நபர்கள்,' என, 694 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு, பறக்கும் படையினர், 108 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தரை தளத்திலேயே தேர்வு அறைகள் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த தமிழ் தேர்வை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில் ஆய்வு செய்தார். முதல் நாளில், 'மாணவர், 97; மாணவியர்,' 56 என, 153 பேர் 'ஆப்செனட்' ஆகினர்.