/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய திறனறி தேர்வில் நீலகிரியில் 11 பேர் தேர்ச்சி; சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
/
தேசிய திறனறி தேர்வில் நீலகிரியில் 11 பேர் தேர்ச்சி; சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய திறனறி தேர்வில் நீலகிரியில் 11 பேர் தேர்ச்சி; சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய திறனறி தேர்வில் நீலகிரியில் 11 பேர் தேர்ச்சி; சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஏப் 25, 2025 11:50 PM
ஊட்டி; தேசிய திறனறி தேர்வில் நீலகிரி மாவட்டத்தில், 11 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்க தொகையாக மாதம், 1000 ரூபாய் விதம் நான்கு ஆண்டுகளுக்கு, 48,000 ரூபாய் அரசு வழங்குகிறது.
தேர்ச்சி பெறும் மாணவர்கள், 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தால் மட்டுமே ஊக்கத் தொகை கிடைக்கும்.
11 பேர் தேர்வு
நடப்பாண்டுக்கான தேர்வு பிப்., மாதம் நடந்தது. நீலகிரி முழுவதும், 300 பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவில், நிஷா பாத்திமா (-அரசு நடுநிலை பள்ளி மேபீல்டு); அகமத் நிகால் (-மராடி அரசு நடுநிலைப்பள்ளி); ஷரம் நிதி (-கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி); ஆசினி கரோலின், அர்ச்சனா (கூடலுார், பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி) ஆகியோர் தேர்ச்சி பெற்றனர்.
மேலும், சாஸ்வின் (மேல் குந்தா அரசு நடுநிலைப்பள்ளி); கிரண் (குன்னுார் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி); கோகுலஸ்ரீ (பாட்டவயல் அரசு நிடுநிலைப்பள்ளி); மேகலா (ஸ்ரீ - கூடலுார் புளியம்பாரா அரசு உயர்நிலைப் பள்ளி); கோகுலதாசன் (ஸ்ரீ காந்தி நகர் அரசு நடுநிலைப்பள்ளி); ஸ்ருதிகா (எருமாடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி) ஆகிய, 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார்,தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.