/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி மலை ரயிலுக்கு 116வது பிறந்த நாள்; கேக் வெட்டி கொண்டாட்டம்
/
ஊட்டி மலை ரயிலுக்கு 116வது பிறந்த நாள்; கேக் வெட்டி கொண்டாட்டம்
ஊட்டி மலை ரயிலுக்கு 116வது பிறந்த நாள்; கேக் வெட்டி கொண்டாட்டம்
ஊட்டி மலை ரயிலுக்கு 116வது பிறந்த நாள்; கேக் வெட்டி கொண்டாட்டம்
ADDED : அக் 15, 2024 09:59 PM

ஊட்டி : ஊட்டி மலை ரயிலுக்கு, 116வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம்- குன்னுார் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. 1909 அக்., 15 முதல் ஊட்டி ரயில் நிலையம் வரை ரயில் சேவை நீடிக்கப்பட்டது.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்., 15ம் தேதிநீலகிரி மலைரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி ரயில் நிலையம் வரை ரயில் பாதையில், 16 குகைகளும், 216 வளைவுகளும், 250 பாலங்களும் உள்ளன.
ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டர்கேஜ் ரயில் பாதைகளில் மிகவும் நீளமானது என்பது இதன் சிறப்பு அம்சம். நீலகிரி மலை ரயிலை யுனஸ்கோ நிறுவனம், 2005 ஜூலை 15-ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
இந்நிலையில், நேற்று, 116வது பிறந்த நாள் விழா ஊட்டி ரயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. மலை ரயிலில் வந்த சுற்றுலா பயணியரை ஸ்டேஷன் மாஸ்டர் மணிகண்டன் தலைமையில் பூங்கொத்து, இனிப்பு கொடுத்து ரயில்வே நிர்வாகம் வரவேற்றனர்.
அப்போது, நீலகிரி மலை ரத பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் நடராஜ் தலைமையில் நிர்வாகிகள் ரயில் தினம் கொண்டாட அங்கு வந்தனர். ரயில்வே நிர்வாகம் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கவில்லை. நுழைவு வாயில் கேக் வெட்டி ரயில் தினத்தை கொண்டாடும் வகையில் ரயில் பயணியரை வரவேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி, மலை ரயிலின் சிறப்புகளை எடுத்து கூறினர்.