/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகராட்சி கமிஷனர் காரில் ரூ.11.70 லட்சம் பறிமுதல்
/
நகராட்சி கமிஷனர் காரில் ரூ.11.70 லட்சம் பறிமுதல்
ADDED : நவ 10, 2024 11:11 PM

ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா.
இவர், நேற்று முன்தினம் சிலரிடம் லஞ்சமாக பெற்ற பணத்தை, ஊட்டியிலிருந்து வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு கொண்டு செல்வதாக, ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார், ஊட்டி தொட்டபெட்டா சந்திப்பில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியஅளவில் வாடகை காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது, 11.70 லட்சம் ரூபாய் இருந்தது. ஜஹாங்கீர் பாஷாவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், ''ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, வாடகை காரில் எடுத்து சென்ற, 11.70 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
''அலுவலகம், வீடுகளில், சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அவர் மீது வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.