ADDED : மார் 24, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுாரில் வீட்டிற்குள் புகுந்த, 12 அடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
குன்னுார் மவுண்ட் பிளசன்ட் சகாய மாதா ஆலய தெரு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரின் வீட்டில் பாம்பு புகுந்ததாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதன் பேரில், நிலைய அலுவலர் முரளி (பொ) தலைமையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அரை மணி நேரம் போராடி, 12 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர். தொடர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.