/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆந்திராவை சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் காயம்
/
ஆந்திராவை சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் காயம்
ADDED : டிச 23, 2024 10:24 PM

கூடலுார்; ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த, 4 பெண்கள்; இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர், நேற்று முன்தினம், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று, இரவு ஊட்டியில் தங்கினர். நேற்று காலை டெம்போ வாகனத்தில் பெங்களூரு செல்வதற்காக கூடலுார் நோக்கி வந்தனர்.
கூடலுார் ஹெல்த் கேம்ப் அருகே, இவர்கள் வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில், பெங்களூருவை சேர்ந்த டிரைவர் ராஜு,35, ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுதிர்,49, ஸ்ரீகாந்த,54, மார்கிரேட்,74, சைலஜா, 46, உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். அவர்களை, கூடலுார் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.