/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேவி கருமாரியம்மன் கோவிலில் 121வது ஆண்டு திருவிழா
/
தேவி கருமாரியம்மன் கோவிலில் 121வது ஆண்டு திருவிழா
ADDED : மே 11, 2025 11:42 PM

குன்னுார்; குன்னுார் வெலிங்டன், சின்ன வண்டிச்சோலை, தேவி கருமாரியம்மன் கோவிலில், 121வது ஆண்டு திருவிழாவில் சிறுமியர் பக்தி பரவசத்துடன் கரகம் எடுத்து வந்தனர்.
குன்னுார் வெலிங்டன், சின்ன வண்டிச்சோலை தேவி கருமாரியம்மன் கோவிலில், 9ம் தேதி காலை, 6:00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.
தொடர்ந்து, கன்டோன்மென்ட் வாரிய பொறியாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்து கொடியேற்றினார். காலை, 10:30 மணிக்கு முகூர்த்த வளையல் அணிவித்தல், அன்னதானம், திருவிளக்கு பூஜை, கொலு பூஜை ஆகியவை நடந்தன. காப்பு கட்டுதல், தேர் பவனி, சீர்வரிசை எடுத்து வருதல், உச்சி கால பூஜை. கஞ்சி வார்த்தல், திருக்கரக ஊர்வலம் நடந்தது.
சிறுமியர் பக்தி பரவசத்துடன் கரகம் எடுத்து வந்தனர். தொடர்ந்து வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது , நேற்று பூ குண்டம் திருவிழா நடந்தது. இன்று (12ம் தேதி) மறுபூஜை, ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், விழா குழுவினர் மற்றும் சின்ன வண்டிச்சோலை, மலையப்பன் காட்டேஜ், கூர்கா கேம்ப், பேரக்ஸ் டைரி பார்ம், எம்.இ.எஸ்., குடியிருப்பு, பேரட்டி ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.