/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மது வகைகளின் விலை உயர்வு: கூடுதலாக ரூ.13 லட்சம் வருவாய்
/
மது வகைகளின் விலை உயர்வு: கூடுதலாக ரூ.13 லட்சம் வருவாய்
மது வகைகளின் விலை உயர்வு: கூடுதலாக ரூ.13 லட்சம் வருவாய்
மது வகைகளின் விலை உயர்வு: கூடுதலாக ரூ.13 லட்சம் வருவாய்
ADDED : பிப் 28, 2024 12:22 AM
ஊட்டி;மாநிலத்தில், டாஸ்மாஸ் மது வகைகள் விலை உயர்வு மூலம் தினமும், 13 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.
நீலகிரியில், 73 டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில், 43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் வகை பிராண்டுகள், 35 வகை பீர், 13 வகையான ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.
இதை தவிர, வெளிநாட்டு மதுபானங்கள் எலைட் டாஸ்மாக் கடைகள் மூலம் விற்கப்படுகின்றன. அரசின் வருவாயில் மதுமான விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், தற்போது, டாஸ்மாக் கடைகளில் சாதாரண ரக குவாட்டர் பாட்டில், 130 ரூபாய், ஆப்பாட்டில், 260 ரூபாய், புல் பாட்டில், 520 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது, அதுவே, நடுத்தர வகை மதுபானங்கள், 160 ரூபாய் முதல், 640 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
ரூ. 13 லட்சம் கூடுதல் வருவாய்
பிப்., 1ம் தேதி முதல் மது வகைகள் மீதான விலை உயர்வை டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதில், 180 மி.லி., அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக குவாட்டர் பாட்டில் விலை, 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல், 180 மி.லி., அளவு கொண்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் விலை, 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி. லி., அளவு கொண்ட பீர் வகைகளின் விலை, 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வின் அடிப்படையில், நீலகிரி டாஸ்மாக் மதுக்கடைகளில் சராசரியாக, 80 ஆயிரம் வரை மதுபாட்டில்கள் விற்பனையாகிறது. தினமும் சராசரியாக, 1.50 கோடி ரூபாய் விற்பனையாகிறது.
தற்போதைய விலை உயர்வால், சாதாரண வகையில், 70 ஆயிரம் பாட்டில்களுக்கு, 10 ரூபாய் வீதம், 7 லட்சம் ரூபாய்; உயர்ரகத்தில், 30 ஆயிரம் மதுபாட்டில்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம், 6 லட்சம் ரூபாய், என, தினமும், கூடுதலாக, 13 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

