ADDED : டிச 09, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : நீலகிரி மாவட்டம், குன்னுார் அருவங்காடு பகுதியில், 'கூல்லிப்' உட்பட போதை வஸ்து விற்பனை செய்வதாக, தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அருவங்காடு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில், பெரிய பிக்கட்டியை சேர்ந்த நாகராஜ், 55, என்பவரிடம், 1.5 கிலோ, 'கூல்லிப்' உட்பட போதை வஸ்துகள் இருந்தன.
அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்கு பயன்படுத்திய பைக் உட்பட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.