/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமி பலாத்கார வழக்கு முதியவருக்கு 15 ஆண்டு சிறை
/
சிறுமி பலாத்கார வழக்கு முதியவருக்கு 15 ஆண்டு சிறை
ADDED : பிப் 15, 2024 12:04 AM

பாலக்காடு - பாலக்காடு மாவட்டத்தில், 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மனிச்சேரியை சேர்நதவர் கிருஷ்ணன்குட்டி, 68. இவர் கடந்த ஆண்டு, 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஒற்றப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணன்குட்டியை கைது செய்தனர்.
குற்றப்பத்திரிக்கை சமர்ப்பித்த நிலையில், இவ்வழக்கு நேற்று பட்டாம்பி விரைவு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
முதியவருக்கு, 15 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ராமுரமேஷ் சந்திரபானு தீர்ப்பளித்தார்.
மேலும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பு வக்கீலாக நிஷா ஆஜரானார்.

