ADDED : ஏப் 10, 2026 05:33 AM
- நிருபர் குழு-: நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில் தலா, 6 பேர் என, 18 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இம்மாதம், 23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம், 30-ம் தேதி தொடங்கி, 6-ம் தேதி நிறைவடைந்தது. மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னுார், கூடலுார் சட்டசபை தொகுதிகளில் மொத்தம், 44 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், வேட்பு மனு பரிசீலனையின் போது, ஊட்டி தொகுதியில் போஜராஜன்(பா.ஜ), இப்ராஹீம்(த.வெ.க.,), ராமச்சந்திரன்(காங்.,), ரகுபதிபீமன்(நா. த. க), சவீதா(தமிழக வாழ்வுரிமை கட்சி), மணியன்(சுயேட்சை) ஆகியோரின் 6 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
குன்னுார் தொகுதியில் ராஜூ(தி.மு.க.,), சாந்தி ராமு(அ.தி.மு.க..), தங்கராஜூ(த.வெ.க.,),.தீனு( நா.த.க), தினேஷ்குமார்(சுயேட்சை), வித்யாசாகர்(சுயேட்சை) ஆகிய 6 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கூடலுார் சட்டசபை தொகுதிக்கு, 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தீபக் சாய் கிஷோர் (த.வெ.க), திராவிடமணி (தி.மு.க), பொன் ஜெயசீலன் (அ.தி.மு.க), கார்த்திகேயன் (நா.த.க), ராஜூ (சுயேட்சை), திலகராஜ் (சுயேட்சை) ஆகியோரின், 6 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட் டன. மொத்தம், 18 பேர் களத்தில் உள்ளனர்.
