/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழநி முருகன் கோவிலுக்கு 190 பக்தர்கள் பாதயாத்திரை
/
பழநி முருகன் கோவிலுக்கு 190 பக்தர்கள் பாதயாத்திரை
ADDED : டிச 31, 2024 06:39 AM
கோத்தகிரி : கோத்தகிரியில் இருந்து, பழநி முருகன் கோவிலுக்கு, 39வது ஆண்டாக பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
கோத்தகிரி ஸ்ரீ பாலமுருகன் பக்த சபை பாதயாத்திரை குழு சார்பில், ஆண்டுதோறும் பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று, பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, 39வது ஆண்டு பாதயாத்திரையை பக்தர்கள் மேற்கொண்டனர். கோத்தகிரி மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜையில் ஈடுபட்ட பக்தர்கள், பாத யாத்திரை புறப்பட்டு சென்றனர். பாதயாத்திரை குழு தலைவர் வடிவேலு தலைமையில், 190 பக்தர்கள் பங்கேற்றனர்.
கோத்தகிரியில் இருந்து, மேட்டுப்பாளையம், அன்னுார், பல்லடம் மற்றும் தாராபுரம் வழியாக, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், வரும், 3ம் தேதி இரவு பழநி அடிவாரத்தை அடைகின்றனர். அங்கு தங்கும் பக்தர்கள், 4ம் தேதி கோவிலுக்கு மலையேறி முருகனை தரிசிக்கின்றனர்.