/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.2 லட்சம் கடனுக்கு ரூ.20 லட்சம்செலுத்தியும் பணம் கேட்டு மிரட்டல்சகோதரர்கள் கலெக்டரிடம் வேதனை

ADDED : ஏப் 08, 2025 02:11 AM
ரூ.2 லட்சம் கடனுக்கு ரூ.20 லட்சம்செலுத்தியும் பணம் கேட்டு மிரட்டல்சகோதரர்கள் கலெக்டரிடம் வேதனை
ஈரோடு:அரச்சலுார் அருகே கூத்தம்பட்டி, ஜே.ஜே.நகரை சேர்ந்த பண்டாரம், அவரது சகோதரர்கள் முருகேசன், பிரகாஷ் மற்றும் குடும்பத்தார், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
பூம்பூம் மட்டுக்காரர் இனத்தை சேர்ந்த நாங்கள், பூம்பூம் மாடு ஓட்டுவது, ஊசி, பாசி செய்து விற்பனை செய்வது போன்ற சில தொழில் செய்கிறோம். கடந்த, 2013ல் சகோதரர்கள் மூவரும் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம், 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றோம்.
கொரோனா காலம் உட்பட தற்போது வரை, மாதம், 20,000 ரூபாய்க்கு மேல் செலுத்தி, 20 லட்சம் ரூபாய் வரை வட்டி, முதலாக செலுத்தி உள்ளோம். இன்னும், 65,000 ரூபாய்க்கு மேல் முதலும், அதற்கான வட்டியும் உள்ளதாக கூறி மிரட்டுகிறார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.