தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலி


UPDATED : அக் 15, 2026 06:24 PM

ADDED : அக் 15, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 06:24 PM ADDED : அக் 15, 2026 06:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி அருகேயுள்ள திருவேகப்புறை பப்படப்படி பகுதியை சேர்ந்தவர் சிஹாப். இவரது மகள் பாத்திமா சஹ்ரா, 5. சிஹாபின் சகோதரர் ஷவுக்கத்தின் இரண்டரை வயது மகன் முகம்மது ஹனான்.

நேற்று முன்தினம் மாலை இரு குழந்தைகளும் வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

நீண்ட நேரமாகியும் குழந்தைகளை காணாததால் பதறிப்போன குடும்பத்தினர், அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது, வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் இருவரும் மூழ்கி கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குடும்பத்தினரும், பக்கத்து வீட்டாரும் இரு குழந்தைகளையும் மீட்டு, பெரிந்தல்மண்ணை பகுதி உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பாத்திமா சஹ்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்

இதுகுறித்து கொப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us