தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரி மாவட்டத்தில் இதுவரை அன்னிய மரங்கள்... 2000 ஏக்கர் அகற்றம்!ஐகோர்ட் உத்தரவின் படி நடப்பாண்டின் பணி ஜரூர்

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை அன்னிய மரங்கள்... 2000 ஏக்கர் அகற்றம்!ஐகோர்ட் உத்தரவின் படி நடப்பாண்டின் பணி ஜரூர்

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை அன்னிய மரங்கள்... 2000 ஏக்கர் அகற்றம்!ஐகோர்ட் உத்தரவின் படி நடப்பாண்டின் பணி ஜரூர்


UPDATED : ஜூன் 29, 2026 07:47 PM

ADDED : ஜூன் 29, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 07:47 PM ADDED : ஜூன் 29, 2026 07:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதிக்கும் அன்னிய மரங்கள் இதுவரை, 2000 ஏக்கர் பரப்பில் அகற்றப்பட்டுள்ளது.

நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதிக்கும் அன்னிய மரங்கள், ஊட்டி, தலைகுந்தா, வென்லாக் டவுன்மலை குந்தா , கோத்தகிரி , கூடலூர் , பந்தலூர் , அவலாஞ்சி , அப்பர் பவானி மற்றும் கோரகுந்தா ஆகிய பகுதிகளில் பல ஏக்கரில் வளர்ந்துள்ளன.

அன்னிய மரங்களால் நீலத்தடி நீர் குறைவதுடன், வன விலங்குகள் உட்பட தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அன்னிய மரங்களான கற்பூரம், சீகை உள்ளிட்டவைகளை அகற்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. நீலகிரியில், 65 சதவீதம் வனம் சார்ந்த பகுதிகளாக உள்ளன. அதில், வனப்பரப்பை அதிகரிக்கும் பணி ஒருப்புறம் நடந்து வந்தாலும், மறுப்புறம் அன்னிய மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அப்பகுதியில் புற்கள் வளர்க்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அவலாஞ்சியில் மரங்கள் அகற்றப்பட்ட பகுதியில் புல்வெளி அதிகரித்து வருகிறது.

சில பகுதிகளில் அன்னிய மரங்கள் அகற்றிய இடத்தில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் அங்கு மீண்டும் சீகை, கற்பூரம் மரங்கள் வேகமாக வளர்ந்து வருவதால், சுற்றுச்சூழல் வெகுவாக சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளை வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அன்னிய மரங்கள் வளராமல் தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வனத்துறையினர் கூறுகையில்,'நீலகிரி மாவட்டத்தில் ஐகோர்ட் உத்தரவின் கீழ் அன்னிய மரங்கள் இதுவரை, 2000 ஏக்கர் அளவுக்கு அகற்றப்பட்டுள்ளன. இன்னும் பல ஏக்கரில் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். அகற்றப்பட்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் உரிய முறையில் நடந்து வருவதால், கடந்த காலங்களை போல் மலை பகுதிகள், மரங்கள் இல்லாத புல்வெளியாக மாற்றி வருகின்றன. இதனால், நிலத்தரடி நீர் வெகுவாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டும் இப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us