தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சிம்ஸ்பூங்காவில் தேனீக்கள் கொட்டியதில் 24 பேர் காயம்

சிம்ஸ்பூங்காவில் தேனீக்கள் கொட்டியதில் 24 பேர் காயம்

சிம்ஸ்பூங்காவில் தேனீக்கள் கொட்டியதில் 24 பேர் காயம்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில், தேனீக்கள் கொட்டியதில், 24 சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்.

குன்னூர் சிம்ஸ் பூங்கா கண்ணாடி மாளிகை அருகே, நேற்று மதியம் 1:00 மணியளவில் மரத்தில் இருந்த தேன்கூடு திடீரென கலைந்து, தேனீக்கள் பறந்து வந்து சுற்றுலா பயணிகளை கொட்டின.

தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் அலறியடித்து குழந்தைகளை பாதுகாத்து தூக்கி கொண்டு சிதறி ஓடினர்.

தேனீக்கள் கொட்டியதில், திருப்பூர், சென்னை, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு இடங்களில் இருந்து வந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என, 24 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக, 108 ஆம்புலன்சில் தகவல் தெரிவிக்கப்பட்ட அனைவரும் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயமடைந்தவர்கள் விபரம்



ஜெயசுதா 40, ஆயிஷா 14 , அனிஷா 12, தினேஷ்குமார், 38, தீக்ஷிதன், 1. தீக்ஷிதா, 6, மாரியம்மாள், 30, திவ்யதர்ஷினி, 9, ஆயிஷா நவதா,30, ஜெயவேலு, 43, நவ்ஷாத் 44, எஸ்தர் 35, சுபா 63. சஞ்சித் குமார் 8, இனியவன் 9, சரஸ்வதி 65, அஜித் 67, கீர்த்தனா 35, சதீஷ் 42, மலர்கொடி, 57, கிருஷ்ணவேணி 32. சர்வேஷ் 11, மகேஷ் ஆதித்யன் 4, ஸ்ரீஷா சைந்தவி, 6.

தொடரும் பாதிப்பு :
இதுபோன்று ஏற்கனவே சுற்றுலா பயணிகளை தேனீக்கள் கொட்டுவது தொடர்கிறது. தோட்டக்கலை துறையினர் இதற்கான நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இது குறித்து தோட்டக்கலை துறையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us