/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்காவுக்கு 23.95 லட்சம் பயணிகள் வருகை; கடந்தாண்டை காட்டிலும் 4.5 லட்சம் பேர் குறைவு

ADDED : ஜன 02, 2025 08:00 PM

ஊட்டி; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கடந்த, 2024ம் ஆண்டு ஜன., மாதம் முதல் டிச., மாதம் வரை 23 லட்சத்து 95 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு, ஆண்டு தோறும் சராசரியாக, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு சென்று மலர்களை ரசித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
தவிர, கோடை சீசனான ஏப்.,மற்றும் மே மாதம், இரண்டாவது சீசன் செப்., அக்., மாதங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
4.5 லட்சம் சுற்றுலா பயணிகள் குறைவு
இந்நிலையில், 2023 ம் ஆண்டு ஜன., மாதம் முதல் டிச., மாதம் வரை, 28 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்தனர். 2024ம் ஆண்டில், 23.95 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டை காட்டிலும், 4.5 லட்சம் சுற்றுலா பயணியர் குறைவாகும். நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.