/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை ஏலத்தில் ரூ.26.46 கோடி வருமானம்; தொடர் விலை ஏற்றத்தால் மகிழ்ச்சி
/
தேயிலை ஏலத்தில் ரூ.26.46 கோடி வருமானம்; தொடர் விலை ஏற்றத்தால் மகிழ்ச்சி
தேயிலை ஏலத்தில் ரூ.26.46 கோடி வருமானம்; தொடர் விலை ஏற்றத்தால் மகிழ்ச்சி
தேயிலை ஏலத்தில் ரூ.26.46 கோடி வருமானம்; தொடர் விலை ஏற்றத்தால் மகிழ்ச்சி
ADDED : செப் 19, 2024 09:36 PM
குன்னுார் : குன்னுார் ஏல மையத்தில், 37வது ஏலம் நடந்தது.
அதில், '16.69 லட்சம் இலை ரகம்; 3.72 லட்சம் டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 20.41 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. '15.34 லட்சம் கிலோ இலை ரகம்; 3.41 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 18.75 லட்சம் கிலோ விற்றது.
மொத்த வருமானம், '26.46 கோடி ரூபாய் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 141.06 ரூபாய்,' என, இருந்தது. ஒரே வாரத்தில் மொத்த வருமானம், 2.88 கோடி ரூபாய் அதிகரித்தது. கடந்த வாரத்தை விட வரத்தும், விற்பனையும் அதிகரித்தது.
சராசரி விலையும் கிலோவுக்கு, 4 ரூபாய் வரை ஏற்றம் கண்டதுடன், இந்த ஆண்டிலேயே முதல் முறையாக அதிபட்சமாக, 141.06 ரூபாய் வரை விலை கிடைத்தது. கடந்த, 4 வாரங்களாக சராசரி விலை 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது.
தென்மாநிலங்களின் ஏற்றம்
கொச்சி ஏல மையத்தில், 9.34 லட்சம் கிலோ வரத்து இருந்ததில், 9.13 லட்சம் கிலோ விற்றது. கோவை ஏல மையத்தில், 4.18 லட்சம் கிலோ வரத்து இருந்ததில், 4.02 லட்சம் கிலோ விற்றது. 'டீசர்வ்' ஏலத்தில், 1.54 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 1.53 லட்சம் கிலோ விற்றது.
சராசரி விலை கிலோவிற்கு, 'கொச்சியில், 171.72 ரூபாய்; கோவையில், 150.83 ரூபாய்; குன்னுாரில், 141.06 ரூபாய்; டீசர்வில் 128.93 ரூபாய்,' என, உயர்ந்தது.