/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் தேயிலை ஏலத்தில் ரூ.27.64 கோடி மொத்த வருமானம்
/
குன்னுார் தேயிலை ஏலத்தில் ரூ.27.64 கோடி மொத்த வருமானம்
குன்னுார் தேயிலை ஏலத்தில் ரூ.27.64 கோடி மொத்த வருமானம்
குன்னுார் தேயிலை ஏலத்தில் ரூ.27.64 கோடி மொத்த வருமானம்
ADDED : நவ 03, 2024 10:23 PM
குன்னுார்; குன்னுார் தேயிலை ஏலத்தில், 27.64 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
குனனுார் ஏல மையத்தில், 43வது ஏலம் நடந்தது. அதில், '21.47 லட்சம் இலை ரகம்; 5.82 லட்சம் டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 27.29 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. மொத்தம், 18.69 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 147.85 ரூபாய் என இருந்தது.
அதில், இலை ரகத்தில் ஆர்த்தோடக்ஸ், 137.69 ரூபாய்; சி.டி.சி., 149.66 ரூபாய் எனவும், டஸ்ட் ரகத்தில் ஆர்த்தோடக்ஸ், 132.73 ரூபாய்; சி.டி.சி.,143.40 ரூபாய் எனவும் இருந்தது. சில குறிப்பிட்ட இலை ரகங்களுக்கு, 151.69 ரூபாய் வரை அதிகபட்ச விலை கிடைத்தது.
ஏறுமுகமாக இருந்த விலை, 3 வாரங்களாக சரிந்து வருகிறது. கடந்த இரு ஏலங்களில் விற்பனையும் மந்தமாக உள்ளது. 68.50 சதவீதம் விற்பனையாகி, 31.50 சதவீதம் தேக்கம் அடைந்தது. மொத்த வருமானம், 27.64 கோடி ரூபாய் கிடைத்தது.
கடந்த ஏலத்தை விட,1.77 கோடி ரூபாய் உயர்ந்தது. 41வது ஏலத்தை ஒப்பிடுகையில், 6 கோடி ரூபாய் சரிந்துள்ளது. கடந்த ஏலத்தை விட சராசரி விலை கிலோவிற்கு, 5.64 ரூபாய் குறைந்தது. தொடர்ந்து, விலை உயர்வு ஏற்பட்ட நிலையில் தற்போது சரிவை நோக்கி செல்கிறது.