/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
3 தொகுதிகள் 689 ஓட்டு சாவடி மையங்கள் தேர்தல் பணிகள் தீவிரம்
/
3 தொகுதிகள் 689 ஓட்டு சாவடி மையங்கள் தேர்தல் பணிகள் தீவிரம்
3 தொகுதிகள் 689 ஓட்டு சாவடி மையங்கள் தேர்தல் பணிகள் தீவிரம்
3 தொகுதிகள் 689 ஓட்டு சாவடி மையங்கள் தேர்தல் பணிகள் தீவிரம்
ADDED : மார் 18, 2024 12:29 AM
ஊட்டி,:நீலகிரி லோக்சபாவில் மூன்று தொகுதிகளில், 689 ஓட்டு சாவடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி லோக்சபாவில், ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளன. அதில், 'ஊட்டி தொகுதி, 92 ஆயிரத்து 813 ஆண்கள், 1 லட்சத்து 1,431 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 12 பேர் என, மொத்தம், 1 லட்சத்து 94 ஆயிரத்து 256 வாக்காளர்கள் உள்ளனர்.
கூடலுார் தொகுதியில், '92 ஆயிரத்து 892 ஆண்கள், 98 ஆயிரத்து 718 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர்,' என, மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர்.
குன்னுார் தொகுதியில், '88 ஆயிரத்து 792 ஆண்கள், 98 ஆயிரத்து 958 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 4 பேர்,' என, 1 லட்சத்து 87 ஆயிரத்து 754 வாக்காளர்கள் உள்ளனர்.
அதன்படி, மூன்று தொகுதிகளில், 5 லட்சத்து 73 ஆயிரத்து 624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மூன்று தொகுதிகளுக்கு உட்பட்ட, 372 இடங்களில், 689 ஓட்டு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், 83 மண்டல நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவித்ததுடன் பறக்கும் படைக்குழுவினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

