/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அனுமதியின்றி கட்டப்பட்ட 3 கடைகளுக்கு 'சீல்'
/
அனுமதியின்றி கட்டப்பட்ட 3 கடைகளுக்கு 'சீல்'
ADDED : நவ 03, 2025 11:30 PM

கூடலூர்: பள்ளிப்படியில் அனுமதியின்றி கட்டப்பட்ட மூன்று கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
கூடலூரில், 'செக் ஷன்-17' அரசு நிலங்களில், புதிய கட்டடங்கள் கட்டவும், அரசு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தடை உள்ளது. பல பகுதிகளில் அனுமதியின்றி புதிய கட்டடங்கள் கட்டுவதாக புகார் எழுந்தது. வருவாய்த் துறையினர், கோழிக்கோடு சாலை நந்தட்டி, செம்பாலா பகுதியில் ஆய்வு செய்து, செக் ஷன்-17 அரசு நிலத்தில் அனுமதியின்றி மேற்கொண்ட கட்டடப் பணிகளை நிறுத்தும்படி கூடலூர் வருவாய் துறையினர் சமீபத்தில் நோட்டீஸ் வழங்கினர்.
தொடர்ந்து, கூடலூர் நகராட்சி ஊழியர்கள், கடந்த வாரம், 7 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இதனிடையே, 'சீல்' வைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் பாரபட்சம் கட்டியதாக புகார் எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன், பள்ளிப்படி பகுதியில், நீரோடையை ஒட்டி அனுமதியின்றி கட்டப்பட்ட மூன்று கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

