/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
300 யூனிட் இலவசம்! மானிய விலையில் பயன்பெற மக்களுக்கு அழைப்பு
/
300 யூனிட் இலவசம்! மானிய விலையில் பயன்பெற மக்களுக்கு அழைப்பு
300 யூனிட் இலவசம்! மானிய விலையில் பயன்பெற மக்களுக்கு அழைப்பு
300 யூனிட் இலவசம்! மானிய விலையில் பயன்பெற மக்களுக்கு அழைப்பு
ADDED : மார் 07, 2024 04:55 AM

ஊட்டி: மத்திய அரசு அறிவித்த, 'பிரதம மந்திரி சூர்யோதயா யோஜனா,' திட்டத்தின் மூலம், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீட்டு கூரைகளில் சோலார் அமைக்க உள்ள திட்டத்தில் பயன் பெற, நீலகிரி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பட்ஜெட்டில், 2024--25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி தொகுப்பை வழங்கும் திட்டம் வெளியிடப்பட்டது.
நடப்பாண்டு ஒரு கோடி வீடுகளில் செயல்படுத்தப்படும் எனவும், இதன் மூலம் ஒரு வீட்டுக்கு மாதம், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, பிரதம மந்திரி சூர்யோதயா யோஜனா திட்டத்தின் மூலம், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீட்டுக் கூரைகளில் சோலார் அமைக்கும் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வருவாய்
இந்த திட்டம் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு, 15 ஆயிரம் முதல், 18 ஆயிரம் ரூபாய் வரை சேமிப்பு கிடைக்கும். மேலும், உபரியாக உள்ள மின்சாரத்தை, மாநில மின்சார வாரியத்திற்கு விற்கலாம். மின்சார வாகனங்களை சார்ஜிங் செய்வதற்கு பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் வாயிலாக சூரிய மின் தகடுகள் வினியோகஸ்தர்கள் அதை நிறுவும் நிறுவனங்கள் அதிகரிக்கும் என்பதால் தொழில் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
இத்திட்டத்தால், மின்சார பில் குறைவதுடன் கூடுதல் வருவாயையும் பெற முடியும். மேலும், அதிக வேலை வாய்ப்பு அளிக்கும். சூரிய மின் சக்தியை முழுவதும் பயன்படுத்த இந்த திட்டத்தில் அனைவரும் சேருவதை இளைஞர்கள் ஊக்குவிக்க வேண்டும். இதற்காக ஏற்படுத்தப்பட்ட http://pmsuryaghar.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
உடனே விண்ணப்பிக்கலாம்
அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா கூறுகையில், ''பிரதமரின் இலவச சூரிய ஒளி மின்சார திட்டத்தில் இணைய தங்கள் பகுதிக்கு வரும் போஸ்ட் மேன் அல்லது அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுக வேண்டும்.
இத்திட்டத்தின் படி, வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி கொள்ளும் வீடுகளுக்கு மாதம், 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படும். குடியிருப்பு வீடுகளுக்கு, 1 கிலோ வாட் முதல் 2 கிலோ வாட் வரை திறனுள்ள சோலார் பேனல்களை பொருத்த, 30 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
கூடுதல் திறன் கொண்ட சூரிய மின் சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு கிலோ வாட் ஒன்றுக்கு, 18 ஆயிரம் வீதம் மூன்று கிலோ வாட் வரை, 78 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் இணைவதற்கு நாளை (8ம் தேதி) வரை விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.

