ADDED : ஜூன் 12, 2026 03:36 AM

குன்னுார்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கேத்தி லெய்ட்லா நினைவு பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரி 'இன்ட்ராக்ட் கிளப்' சார்பில், மின்னணு கழிவு சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் ஒரு வாரம் நடந்தது.
முகாமை பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பரமேஸ்வரி, செசில் தாமஸ் ஒருங்கிணைத்தனர். மின்னணு கழிவுகளால் ஏற்படும் ஆபத்து, பாதுகாப்பான மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை மாணவர்கள் தயாரித்தனர்.
கேத்தொரையில் ஊர் பிரமுகர் தேவராஜ் தலைமையில், 11ம் வகுப்பு மாணவர்கள் வீடுதோறும் சென்று துண்டு பிரசுரம் வழங்கினர். மக்கள் தங்களது வீடுகளில் இருந்த பழைய கம்ப்யூட்டர்கள், டி.வி., மின்சார கம்பி,, கிரைண்டர்கள் உள்ளிட்ட உபயோகமற்ற சாதனங்களை வழங்கினர். சேகரிக்கப்பட்ட, 334 கிலோ மின்னணு கழிவுகள், மறு சுழற்சிக்காக 'கிளீன் குன்னூர்' அமைப்பிடம் ஒப்ப டைக்கப்பட்டன.
