ADDED : டிச 27, 2024 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி; கோத்தகிரி மாரியம்மன் கோவிலில், 37ம் நாள் மண்டல பூஜை சிறப்பாக நடந்தது.
கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில், நவ., 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததை அடுத்து, மண்டல பூஜை நடந்து வருகிறது. கோத்த கிரி பகுதியில் வசிக்கும் பல்வேறு சமுதாயத்தினர் மற்றும் தனியார் சார்பில், அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார பூஜை நடந்து வருகிறது. ஆன்மிக சொற்பொழிவு பஜனை இடம்பெறுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
அதன்படி, 37வது நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. அதிகாலை முதல், அம்மனுக்கு சிறப்பு அலங்கார மலர் வழிபாடு, சிறப்பு பூஜை நடந்தது.
பகல் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோத்தகிரி நகரம் உட்பட, கிராமப்புறங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.