sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாவட்ட சுகாதார துறையில் பதிவு செய்துள்ள 3,800 கர்ப்பிணி தாய்மார்கள்! பாதுகாப்பான பிரசவத்திற்கு டாக்டர்கள் அறிவுரை

/

மாவட்ட சுகாதார துறையில் பதிவு செய்துள்ள 3,800 கர்ப்பிணி தாய்மார்கள்! பாதுகாப்பான பிரசவத்திற்கு டாக்டர்கள் அறிவுரை

மாவட்ட சுகாதார துறையில் பதிவு செய்துள்ள 3,800 கர்ப்பிணி தாய்மார்கள்! பாதுகாப்பான பிரசவத்திற்கு டாக்டர்கள் அறிவுரை

மாவட்ட சுகாதார துறையில் பதிவு செய்துள்ள 3,800 கர்ப்பிணி தாய்மார்கள்! பாதுகாப்பான பிரசவத்திற்கு டாக்டர்கள் அறிவுரை


ADDED : செப் 30, 2024 10:54 PM

Google News

ADDED : செப் 30, 2024 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : நீலகிரியில், 3,800 கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பான பிரசவத்திற்கு சுகாதார துறை அறிவுரை வழங்கியுள்ளது.

நீலகிரியில், ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகா பகுதிகளில், 37 ஆரம்ப சுகாதார நிலையம், 216 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் கர்ப்பம் தரித்த கர்ப்பிணி தாய்மார்கள் அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின், சுகாதார துறையினர் தெரிவிக்கும் வழிமுறைகளை பேரு காலத்தில் கட்டாயம் கடைப்பிடித்து பாதுகாப்பாக பிரசவிக்க வழிமுறைகளை சுகாதார துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

சுகாதார துறை வழிமுறைகள்


கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் தங்களது பகுதியில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் அல்லது கிராம சுகாதார தன்னார்வலர்களை ( ஆஷா பணியாளர்கள்) அணுகி பி.ஐ.சி.எம்.இ., போர்டல் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தங்களின் உடல் எடை, உயரம், ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் மற்றும் தைராய்டு போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பத்தை பதிவு செய்தவுடன் 'ரணஜன்னி, டி.டி-2' ஆகியவற்றை, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலுத்தி கொள்ள வேண்டும்.

சிக்கலான கர்ப்பிணி தாய்மார்கள் ரத்த சோகை, தைராய்டு, வலிப்பு நோய், இருதய நோய் கர்ப்ப கால சர்க்கரை நோய் கண்டறியப்பட்ட பின், மருத்துவர் மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

சிக்கலான கர்ப்பிணி தாய்மார்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.

கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் முதல் ஏழு மாதம் வரை, மாதம் ஒரு முறையும் எட்டு மற்றும் ஒன்பதாவது மாதங்களில் இரண்டு முறையும், அதற்குப் பின் பிரசவம் வரை வாரம் ஒரு முறை கட்டாயம் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.

திருமணமான அனைத்து பெண்களும் கர்ப்பம் தரிக்கும் முன், 6 மாதம் காலத்திற்கும் மற்றும் கர்ப்பம் தரித்த முதல் மூன்று வாரம் வரை 'போலிக் அமில' மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.

நான்காவது மாதம் முதல் பிரசவம் முடிந்து ஆறு மாதம் காலம் வரை இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் பின்பற்றி சுகமான மற்றும் பாதுகாப்பான பிரசவத்தை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான விழிப்புணர்வு மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அனோமலி ஸ்கேன் கட்டாயம்...

மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், '' கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரும், 5வது மாத இறுதியில் பிறவி குறைபாடுகளை கண்டறிய கட்டாயம் 'அனோமலி ஸ்கேன் ' செய்து கொள்ள வேண்டும்.ஊட்டி, குன்னுார் மற்றும் கோத்தகிரி வட்டங்களில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள், ஊட்டியில் உள்ள மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.கூடலுார் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள், கூடலுாரில் உள்ள தலைமை மருத்துவமனையில் மருத்துவரை அணுகி பிரதி மாதம் நான்காம் செவ்வாய்க்கிழமை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.பிறவி குறைபாடுகள் கண்டறியப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மேல் சிகிச்சை முறைக்கு மருத்துவர் மூலம் ஆலோசனை பெற வேண்டும். இந்த ஸ்கேன் மிக முக்கியம்,'' என்றார்.








      Dinamalar
      Follow us