/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
என்.சி.சி., மாணவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் எழுத்து தேர்வு 14 பள்ளிகளிலிருந்து 386 பேர் பங்கேற்பு

ADDED : பிப் 05, 2025 11:54 PM
ஊட்டி: நீலகிரியில் உள்ள பள்ளிகளை சேர்ந்த என்.சி.சி., மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்'ஏ' எழுத்து தேர்வு நடந்தது.
தேசிய அளவில் ஆண்டுதோறும் தேசிய மாணவர் படை என்.சி.சி., மாணவர்களுக்கான, 'ஏ' சான்றிதழ் தேர்வு பிப்., மாதத்தில் நடத்தப்படுகிறது.
அதில், நீலகிரி மாவட்டம், 31வது தமிழ்நாடு அணி என்.சி.சி., அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள, ஊட்டி சி.எஸ்.ஐ.,-சி. எம். எம்., பள்ளியில், ஜோசப்பள்ளி, நஞ்சநாடு, எடக்காடு, மஞ்சூர்,சாம்ராஜ், முத்தோரை பாலாடா ஏகலைவா, குன்னுார் ஜோசப்பள்ளி, புனித அந்தோணியார் பள்ளிகளுக்கு தேர்வு நடந்தது.
மேலும், கூடலுார் மார்னிங் ஸ்டார், தேவர் சோலை, அய்யன் கொல்லி, லாரன்ஸ் பள்ளி , மேட்டுப்பாளையம் எஸ்.வி. ஜி.வி., ஆகிய பள்ளிகளை சேர்ந்த என்.சி.சி.,மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ், 'ஏ'எழுத்து தேர்வு இதே பள்ளியில் நடந்தது. 386 என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
நீலகிரி மாவட்ட தமிழ்நாடு தனி அணி என்.சி.சி., அணியின் கமாண்டர் லெப்டினென்ட் கர்னல் சந்தோஷ் தலைமை தாங்கி எழுத்து தேர்வை துவக்கி வைத்தார். அதில், '375 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு, 125 மதிப்பெண்களுக்கு துப்பாக்கி கையாளுதல் தேர்வு , உடல் தகுதி தேர்வு,' என, மொத்தம், 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.
இத்தேர்வுகளில், 200 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. என்.சி.சி., அலுவலர்கள் காமராஜ், ஜாய் தாமஸ், பிரிட்டோ, சுப்ரமணி, ஸ்ரீனிவாசன்,ரேவதி சுபேதார்கள் தேவேந்திர சிங், சதீஷ், ஈஸ்வர் உட்பட பலர் பங்கேற்றனர்.