/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் 38வது ஆண்டு விழா கோலாகலம்
/
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் 38வது ஆண்டு விழா கோலாகலம்
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் 38வது ஆண்டு விழா கோலாகலம்
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் 38வது ஆண்டு விழா கோலாகலம்
ADDED : ஜூன் 27, 2025 09:05 PM

குன்னுார்; வெலிங்டன் ஐயப்பன் கோவிலில், 38வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
குன்னுார்- ஊட்டி சாலையில் அமைந்துள்ள வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் நேற்று நடந்த, 38வது ஆண்டு விழாவில் காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 6:30 மணிக்கு அபிஷேகம், காலை,7:00 மணிக்கு உஷ பூஜை, 9:00 மணிக்கு கலச பூஜை நடந்தது. 11:00 மணிக்கு கலச அபிஷேகம், உச்ச பூஜை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஐயப்பன் அலங்கார ரதம் கோவிலில் துவங்கி, போகித் தெரு வழியாக சென்று, மீண்டும் கோவிலை அடைந்தது. முன்னதாக, செண்டை மேளம், சங்கு முழங்க ஐயப்பனுக்கு புஷ்ப அபிஷேகம் நடந்தது. விளக்கு மற்றும் பல்வேறு வகையான மலர்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர்.
தொடர்ந்து, தீபாரதனை புஷ்ப அபிஷேகம் தாயம்பகா, மத்தள பூஜை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சபரிமலை பரம்பரை தலைமை குருக்கள் பிரம்ம ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி மேற்பார்வையில், நம்பூதிரிமார்கள் பூஜைகள் நடத்தினர். ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் முரளிதரன் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

