/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்சால் விபத்து காட்டேரி அருகே 42 பயணிகள் காயம்: உயிரை காத்த இரும்பு துாண்

ADDED : ஜன 28, 2025 07:27 AM

குன்னுார: குன்னுார் காட்டேரி அருகே அரசு பஸ், வழிகாட்டி இரும்பு துாணில் மோதிய விபத்தில், 42 பேர் காயமடைந்தனர்.
உட்லேண்டஸ் பகுதியில் இருந்து வந்த அரசு பஸ், நேற்று மதியம் காட்டேரியில் சில பயணிகளை ஏற்றி, 55 பயணிகளுடன் குன்னுாருக்கு புறப்பட்டது. 100 மீட்டர் துாரம் செல்வதற்குள், திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், வலதுபுறமுள்ள நெடுஞ்சாலை துறை வழிகாட்டி இரும்பு துாணில், மோதி விபத்துக்குள்ளானது.
அதில், 42 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. டிரைவர் மனோஜ்,50, செல்வராஜ்,54, மூர்த்தி,58, கலைசெல்வன்,48, மகேஷ்,48, ஜெயராம், 62, ஆசாகுமாரி, மலர்,58,சசிகலா,48, விஜயலட்சுமி,53 உட்பட, 42 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
போலீசார் கூறுகையில்,'பஸ்சில் திடீரென ஸ்டேரிங்லாக் ஆனதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. டிரைவர் இதுவரை வேறு எந்த சிறு விபத்துகளும் ஏற்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. அப்பகுதியில் வழிகாட்டி துாண் இல்லையெனில், 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்திருக்கும், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்,'என்றனர்.
பயணிகள் கூறுகையில், 'நீலகிரியில் பெரும்பாலான அரசு பஸ்கள் முறையாக பராமரிப்பு இல்லாததால், ஆங்காங்கே பழுதடைந்து நிற்பது அதிகரித்து வருகிறது. மலை பகுதி என்பதால், இங்குள்ள பழமையான பஸ்களை மாற்றி, புதிய பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.