/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விதிமீறி கட்டப்பட்ட 48 கட்டடங்களுக்கு 'சீல்'
/
விதிமீறி கட்டப்பட்ட 48 கட்டடங்களுக்கு 'சீல்'
ADDED : பிப் 08, 2024 10:29 PM
ஊட்டி : 'ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில்,48 கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது,' என, கலெக்டர் கூறினார்.
ஊட்டியில் கலெக்டர் அருணா நிருபர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கட்டடம் கட்டுவதற்கு, மாஸ்டர் பிளான் சட்டத்தின் கீழ், தடையில்லா சான்று பெறவேண்டும். ஊட்டியில் ஒவ்வொரு வாரமும் கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில், அனுமதியில்லாத கட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கட்டடங்களுக்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா, என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில், ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில்,48 கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கட்டட விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, கிராமப்புறங்களில் நடக்கும் அனுமதி இல்லாத கட்டடங்களை ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவினர் கிராமம் தோறும் சென்று, அங்கு கட்டடப்படும் கட்டடங்களின் அனுமதி; கட்டுமான பணிகள் நடக்கும் பகுதிகளை ஆய்வு செய்வர். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

