/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் விவசாயி வீட்டில் 48 சவரன் கொள்ளை: சத்தீஸ்கரை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் கைது
/
ஊட்டியில் விவசாயி வீட்டில் 48 சவரன் கொள்ளை: சத்தீஸ்கரை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் கைது
ஊட்டியில் விவசாயி வீட்டில் 48 சவரன் கொள்ளை: சத்தீஸ்கரை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் கைது
ஊட்டியில் விவசாயி வீட்டில் 48 சவரன் கொள்ளை: சத்தீஸ்கரை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் கைது
ADDED : டிச 25, 2024 07:53 AM

ஊட்டி; ஊட்டியில் விவசாயி வீட்டில், 48 சவரன் கொள்ளை போன சம்பவத்தில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி புதுமந்து எல்லைக்கு உட்பட்ட கவுடா சோலை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (எ) பழனிசாமி; மனைவி தனலட்சுமி. இவர்கள், அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாய செய்து வருகின்றனர். கடந்த, 19ம் தேதி இருவரும் கோவிலுக்கு சென்று மதியம் வீட்டுக்கு திரும்பினர்.
முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
புதுமந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வந்து கை ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் மோக்கா வீட்டை ஒட்டி இருந்த தேயிலை தோட்டத்தில் சுற்றிவிட்டு நின்று விட்டது.
தொடர்ந்து, எஸ்.பி.,நிஷா உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., நவீன்குமார் மேற்பார்வையில் புதுமந்து இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில், 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
விசாரணையில், 'கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்ட வேலைக்காக, சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தை சேர்ந்த அபய் போர்த்தி,21, ஈஸ்வர் சிங் கார்டு,43, அனிதா பாய்,38, அங்கித் சிங் போர்த்தி,21, ஆகியோர் ஊட்டிக்கு வந்து இவர்களிடம் வேலை செய்துள்ளனர்.
இந்த கும்பல்,48 சவரன் நகை, 2000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி சத்தீஸ்கருக்கு தப்பியோடினர்,' என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, சத்தீஸ்கர் சென்ற தனிப்படை போலீசார் நான்கு பேரை கைது செய்து நேற்று ஊட்டிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டது. இந்த குழுவில் இருந்த தனிப்படை போலீசாரை கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பாராட்டினார்.

