/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடந்தாண்டு ஏமாற்றிய பருவ மழையால் மின் உற்பத்தி 48 ஆயிரம் மெகாவாட் பாதிப்பு! கோடையை சமாளிக்க முடியாமல் மின்வாரியம் திணறல்
/
கடந்தாண்டு ஏமாற்றிய பருவ மழையால் மின் உற்பத்தி 48 ஆயிரம் மெகாவாட் பாதிப்பு! கோடையை சமாளிக்க முடியாமல் மின்வாரியம் திணறல்
கடந்தாண்டு ஏமாற்றிய பருவ மழையால் மின் உற்பத்தி 48 ஆயிரம் மெகாவாட் பாதிப்பு! கோடையை சமாளிக்க முடியாமல் மின்வாரியம் திணறல்
கடந்தாண்டு ஏமாற்றிய பருவ மழையால் மின் உற்பத்தி 48 ஆயிரம் மெகாவாட் பாதிப்பு! கோடையை சமாளிக்க முடியாமல் மின்வாரியம் திணறல்
ADDED : ஜன 21, 2024 10:38 PM

ஊட்டி:கடந்தாண்டில் பருவ மழை பொய்த்ததால், 48 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில், குந்தா, பைக்காரா நீர்மின் திட்டத்தின் கீழ், 'குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், அவலாஞ்சி, காட்டு குப்பை, பைக்காரா, மசினகுடி,' உள்ளிட்ட, 12 மின் நிலையம் உள்ளன. இங்குள்ள, 13 அணைகள் 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படும் நீர் வாயிலாக, 833.65 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. அணைகள் நிரம்பி வெளியேறும் உபரி நீர் சமவெளி பகுதிகளில் உள்ள பல்லாயிரம் ஏக்கர் பாசன விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பொய்த்தது பருவ மழை
கடந்த ஆண்டில் கோடை, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்ததால், மலை காய்கறி மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை கிடைத்தது.
மின் உற்பத்திக்கான அணைகளில் கடந்த ஜன., மாதம், 80 சதவீதம் அளவுக்கு அணைகளில் தண்ணீர் இருப்பு இருந்தது. இந்நிலையில், பருவ மழை பொய்த்ததாலும், படிப்படியாக மின் உற்பத்திக்கு தண்ணீர் பயன்படுத்தியதால் இருப்பில் இருந்த தண்ணீர் குறைந்தது.
தற்போது, பெரும்பாலான அணைகளில், 30 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால், தினசரி மின் உற்பத்தி, 200 முதல் 300 மெகாவாட்டாக குறைந்தது. இதே மாதத்தில்,கடந்தாண்டு, 500 மெகாவாட் உற்பத்தி இருந்தது.
இந்நிலையில், தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்ததை அடுத்து, கடந்தாண்டு மே மாதத்திலிருந்து சராசரியாக, தினசரி, 200 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மே மாதம் முதல், டிச., வரை, சராசரியாக, 1.20 லட்சம் மெகாவாட்டாக இருக்க வேண்டிய மின் உற்பத்தி, 72 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது.
48 ஆயிரம் மெகாவாட் பாதிப்பு
அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், 48 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கோடை காலம் துவங்க உள்ள நிலையில் மின்வாரியம் திணறி வருகிறது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கடந்தாண்டை பொறுத்தவரை, குறிப்பாக, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மழை பொய்த்ததால் அணைகளில் தண்ணீர் குறைந்தது. எதிர்பார்த்த அளவு மின் உற்பத்தியை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மழை வந்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்,' என்றனர்.