தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ எச்.பி.எப்., வளாகத்தில் மண் திருடிய 5 பேர் கைது

 எச்.பி.எப்., வளாகத்தில் மண் திருடிய 5 பேர் கைது

 எச்.பி.எப்., வளாகத்தில் மண் திருடிய 5 பேர் கைது


ADDED : பிப் 19, 2026 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 07:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி எச் . பி .எப் ., தொழிற்சாலை வளாகத்தில் மண் திருடியதாக , 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டியில் எச்.பி.எப்., தொழிற்சாலை. கடந்த, 10 ஆண்டுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. தொழிற்சாலை வளாகம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு , பல நுழைவு வாயில்கள் வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து , கழிவு மண்ணில் கலந்திருகும் வெள்ளியை திருடி விற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் மர்ம நபர்கள் தொழிற்சாலை வளாகத்தில் சுற்றி திரிந்துள்ளனர். தகவலின் பேரில், புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், எஸ்.ஐ. ஹரிஹரன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.

அங்கு சுற்றித்திரிந்த சிலரை பிடித்து விசாரித்தனர். 11 மூட்டையில் மண்ணை திருடிய ஊட்டி தலைக்குந்தா பகுதியை சேர்ந்த ராஜன்,48, சுபாஷ்,43, குமார், 52, சந்தோஷ்,31, மோகன்ராஜ்,37, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us