/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளாவில் 10 ஆண்டுகளில் யானை தாக்கி 51 பேர் பலி பாதுகாப்பு ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை
/
கேரளாவில் 10 ஆண்டுகளில் யானை தாக்கி 51 பேர் பலி பாதுகாப்பு ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை
கேரளாவில் 10 ஆண்டுகளில் யானை தாக்கி 51 பேர் பலி பாதுகாப்பு ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை
கேரளாவில் 10 ஆண்டுகளில் யானை தாக்கி 51 பேர் பலி பாதுகாப்பு ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை
ADDED : ஜூன் 05, 2025 11:25 PM
பாலக்காடு,; கேரளாவில், கடந்த 10 ஆண்டுகளில், காட்டு யானைகள் தாக்குதலால், 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி சீரக்கடவு பகுதியை சேர்ந்த, மல்லன் என்பவர், கடந்த மே 30ம் தேதி யானை தாக்கி இறந்தார். இந்நிலையில், அம்மாநில வனத்துறை சார்பில், அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரளாவில் இரு மாதங்களில், வீட்டின் அருகே உள்ள வனப்பகுதிக்கு மாடு மேய்க்க சென்ற மல்லன், ஏப்., 27ம் தேதி விறகு சேகரிக்கச் சென்ற அட்டப்பாடி சுவர்ணகத்தா பகுதியைச் சேர்ந்த காளி, பாலக்காடு மூண்டூர் கயறம்கோடு பகுதியைச் சேர்ந்த அலன், 24, ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
கடந்த, 2020ல் 4 பேர், 2021ல் 10 பேர், 2021ல் 7 பேர், 2023ல் 5 பேர், காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில், கடந்த 10 ஆண்டுகளில், காட்டு யானை தாக்கி, 51 பேர் இறந்தனர். இதில், 33 பேர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்.
2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில், காட்டு யானை மட்டுமின்றி, மற்ற வனவிலங்கு தாக்குதலில், பாலக்காடு மாவட்டத்தில் மட்டும், 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
மண்ணார்க்காடு பிரிவில் மட்டும், கடந்த 10 ஆண்டுகளில் வன உரிமை சட்டத்தின் கீழ் வரும் பழங்குடியின மக்கள், 30 பேர் வனவிலங்கு தாக்குதல்களில் இறந்தனர்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, 'கேரளா இன்டிபன்டன்ட் பார்மர் அசோசியேஷன்' (கே.ஐ. எப்.ஏ.,) மாவட்ட தலைவர் சன்னிஜோசப் கூறியதாவது: வனத்துறையின் அறிக்கையை காணும் போது, பாலக்காடு மாவட்டத்தில் வனவிலங்கு தாக்குதல்களின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. காட்டு யானைகள் பரவலான பயிர் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
காட்டு யானைகள் வேலிகளை உடைத்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. பயிர்கள் சேதமடைந்த பிறகோ அல்லது விபத்து ஏற்பட்ட பிறகோ, வனத்துறை, விரைவு அதிரடிப் படையினர் வருகின்றனர். யானையை பட்டாசு வெடித்து விரட்டினாலும், அது இரண்டு நாட்களுக்குள் திரும்பி வருகிறது.
குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க சூரிய மின் வேலிகள், சூரிய சக்தி தொங்கும் வேலிகள், அகழி மற்றும் தடுப்பு சுவர்கள் அமைத்து, மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.