/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
57வது பேரவை கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு
/
57வது பேரவை கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : டிச 12, 2025 07:09 AM
ஊட்டி: நீலகிரி மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின், 57வது பேரவை கூட்டம் ஊட்டியில் நடந்தது.
சங்க தலைவர் நஞ்சன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜோகி, செயலாளர் அர்ஜூணன், பொருளாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர். கோவை மண்டல தலைவர் வெங்கடாசலம் பேசுகையில், '' ஓய்வூதியர்கள் தங்களது மொபைலில் களஞ்சியம் செயலியை நிறுவி ஓய்வூதியர் கணக்கை தெரிந்து கொள்ள வேண்டும். மாவட்ட சங்கம் நமது ஆர்.ஓ.ஜெ., புத்தகத்திற்கு நிறைய சந்தாதாரர்களை சேர்க்க வேண்டும். மத்திய அரசு வழங்குவது போல மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவபடியை உயர்த்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் சங்கத்தின் வாயிலாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
முன்னாள் கல்லுாரி மு தல்வர் குள்ளன், முன்னாள் ஊட்டி அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் ஐயாரு ஆகியோர் பேசினார். புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக நஞ்சன், துணைத்தலைவர்களாக ஜோகி, சந்திரன், செயலாளராக அர்ஜூணன், இணை செயலாளர்களாக பெரியசாமி, மணிகாந்தி, பொருளாளராக சந்திரன் ஆகியோர் ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட இணை செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

