ADDED : நவ 24, 2025 05:24 AM
கோத்தகிரி: கோத்தகிரி அரவேனு கிளை நூலகத்தில், வாசகர் வட்டம் மற்றும் அரவேனு அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில், 58வது தேசிய நூலக வார நிறைவு விழா நடந்தது.
சக்கத்தா ஊர் தலைவர் பெள்ளிராஜ், குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வாசகர் வட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜன் முன்னிலை வகித்தார்.
விழாவில், ஒரு வாரம் நடந்த நிகழ்ச்சியில், கலை மற்றும் அறிவுத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங் கப்பட்டது. நிகழ்ச்சியில், லட்சுமி ராமன், 1000 ரூபாய் செலுத்தி, நூலகத்தில், 198வது புரவலராக சேர்ந் தார். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆசிரியர்கள் குமார், உமா, ராஜேஸ்வரி, பரமேஷ், கண்ணன் மற்றும் பூபதி உட்பட, வாசகர் வட்ட நிர்வாகிகள், வாசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட, பொது மக்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, நூலகர் குமார் வரவேற்றார். ஆசிரியை ராஜகுமாரி நன்றி கூறினார்.

