/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் 60 கிலோ போதை வஸ்து பறிமுதல்; மூன்று பேர் கைது: வாகனம் பறிமுதல்
/
கோத்தகிரியில் 60 கிலோ போதை வஸ்து பறிமுதல்; மூன்று பேர் கைது: வாகனம் பறிமுதல்
கோத்தகிரியில் 60 கிலோ போதை வஸ்து பறிமுதல்; மூன்று பேர் கைது: வாகனம் பறிமுதல்
கோத்தகிரியில் 60 கிலோ போதை வஸ்து பறிமுதல்; மூன்று பேர் கைது: வாகனம் பறிமுதல்
ADDED : அக் 04, 2024 10:12 PM
கோத்தகிரி : கோத்தகிரியில், 60 கிலோ போதை வஸ்து விற்பனை செய்த மூவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மாநில முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வகை பொருட்களின் புழக்கம் இருந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் போதை பொருட்களை தடுக்க, எல்லைப் பகுதிகளில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு, வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எனினும், கடத்தல் நின்றபாடில்லை.
60 கிலோ பறிமுதல்
இந்நிலையில், கோத்தகிரி பகுதியில் போதை பொருட்கள் புழக்கம் இருந்து வருவதாக, போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி, கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையிலான போலீசார், சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு 'பிக்-அப்' வாகனத்தில், 60 கிலோ எடை கொண்ட, 200 பண்டல் போதை வஸ்து இருந்தது தெரியவந்தது. அதனை பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மேட்டுப்பாளையம் பாக்குகார தெருவை சேர்ந்த, முகமது பாரூக்,44, மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சந்தை கடை பகுதியை சேர்ந்த, முபாரக் அலி,34, மற்றும் சிறுமுகை ரோடு சங்கர் நகர் பகுதியை சேர்ந்த, முஜிபுர் ரகுமான்,40, ஆகியோர், தடை செய்யப்பட்ட போதை வஸ்து பாக்கெட்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வந்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.