/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொங்கல் விழா கலை போட்டிகள் 600 மாணவர்கள் பங்கேற்பு
/
பொங்கல் விழா கலை போட்டிகள் 600 மாணவர்கள் பங்கேற்பு
பொங்கல் விழா கலை போட்டிகள் 600 மாணவர்கள் பங்கேற்பு
பொங்கல் விழா கலை போட்டிகள் 600 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : டிச 08, 2025 05:35 AM

கூடலூர்: கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு நீலகிரி தமிழ்ச் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கலை மற்றும் இலக்கிய போட்டிகள் நேற்று, நடந்தது. செயலாளர் நாகநாதன் வரவேற்றார். விழாவுக்கு சங்கத்தின் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். போட்டிகளை, லண்டனில் டாக்டராக பணிபுரிந்து வரும் கூடலூரை சேர்ந்த சிவதாஸ் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு இடையே பேச்சு. கவிதை, ஓவியம், கட்டுரை, சித்தர் பாடல் ஒப்புவிப்பு, கோலப்போட்டிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட 27 வகையான போட்டிகள் நடந்தது. கூடலூர் வட்டாரத்தைச் சேர்ந்த 600 மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
விழாவில், சங்கத்தின் பொருளாளர் மணிகண்டன், துணைத் தலைவர ஜெகநாதன், துணைச் செயலாளர்கள் கணேசன், கலைசெல்வன், பள்ளி ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பந்தலூர் புனித சேவியர் பள்ளியில் நேற்று முன்தினம், நீலகிரி தமிழ் சங்கம் சார்பில் நடந்த கலை, இலக்கிய போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

