/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் காலியாக உள்ள 64 அங்கன்வாடி பணியிடங்கள்; தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்

ADDED : ஏப் 11, 2025 09:44 PM
ஊட்டி,; நீலகிரியில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
மாவட்ட திட்ட அலுவலகம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள, 8 அங்கன்வாடி பணியாளர்கள், 13 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ,43 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமன செய்யப்பட உள்ளன.
அங்கன்வாடி பணியாளர்கள் , குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களில் எண்ணிக்கை மற்றும் இன சுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகம், அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும்.
விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து இம்மாதம், 24ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடங்களுக்கு, 10ம் வகுப்பு , 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதற்கட்டமாக, தொகுப்பூதியமாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு , 7,700 ரூபாய் , குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு , 5,700 ரூபாய் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு, 4,100 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும். பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.