/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கஞ்சா எண்ணெய் கடத்திய 7 பேர் கைது
/
கஞ்சா எண்ணெய் கடத்திய 7 பேர் கைது
ADDED : ஆக 06, 2025 08:11 PM
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை இன்ஸ்பெக்டர் ஷிஜு தலைமையிலான, கலால் துறையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, குருவாயூர் பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சென்ற காரை சோதனையிட்டனர். காரில், 2 கிலோ 121 கிராம் கஞ்சா எண்ணெய் (ஹாஷிஷ் ஆயில்) பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு, 2.25 கோடி ரூபாய் ஆகும்.
இதையடுத்து, காரில் பயணித்த திருச்சூர் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த அஜித், 43, சுஹத், 38, விஷ்ணு, 32, குருவாயூரை சேர்ந்த ஷினில், 43, விஷ்ணு, 40, ஷிஜில், 39, பாவரட்டி பகுதியைச் சேர்ந்த ஷிஜு, 37, ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், ஏழு பேரையும் சிறையில் அடைத்தனர்.