/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலைப்பகுதி கிராமங்களில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
/
மலைப்பகுதி கிராமங்களில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
மலைப்பகுதி கிராமங்களில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
மலைப்பகுதி கிராமங்களில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
ADDED : மார் 20, 2024 10:21 PM
மேட்டுப்பாளையம் : லோக்சபா தேர்தலை முன்னிட்டு காரமடை அருகே கேரளா எல்லையில் அமைந்துள்ள முள்ளி மற்றும் கோபனாரி வனப்பகுதிகளில் கியூ பிரிவு போலீசார், வனத்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் மாவோயிஸ்ட்டுகளால் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீசார் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே கேரளா மாநில எல்லை பகுதியான முள்ளி மற்றும் கோபனாரி வனப்பகுதிகளில் கியூ பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'முள்ளி, கோபனாரி செக்போஸ்ட்கள், அத்திக்கடவு, பில்லூர், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதூர், காலன்புதூர், செங்குட்டை, குட்டை புதூர், பட்டி சாலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன.
மலை கிராமங்களில் உள்ள பழங்குடியினரிடம் மாவோயிஸ்ட்கள் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்,' என்றனர். மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் லோக்சபா தேர்தலுக்கு 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 42 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இதில் மலைவாழ் பகுதிகளில் 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இவை பதற்றமான வாக்குச்சாவடிகளுக்குள் வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலரும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான குணசேகரன் கூறுகையில், 'மலை கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.' என்றார்.

