/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் விதிமீறல்களை கண்காணிக்க தனி கமிட்டி; சட்டத்தை மதிக்காதவர் குறித்த புகாருக்கு எண் அறிவிப்பு: 75 கட்டடங்களுக்கு 'சீல்'!
/
நீலகிரியில் விதிமீறல்களை கண்காணிக்க தனி கமிட்டி; சட்டத்தை மதிக்காதவர் குறித்த புகாருக்கு எண் அறிவிப்பு: 75 கட்டடங்களுக்கு 'சீல்'!
நீலகிரியில் விதிமீறல்களை கண்காணிக்க தனி கமிட்டி; சட்டத்தை மதிக்காதவர் குறித்த புகாருக்கு எண் அறிவிப்பு: 75 கட்டடங்களுக்கு 'சீல்'!
நீலகிரியில் விதிமீறல்களை கண்காணிக்க தனி கமிட்டி; சட்டத்தை மதிக்காதவர் குறித்த புகாருக்கு எண் அறிவிப்பு: 75 கட்டடங்களுக்கு 'சீல்'!
UPDATED : பிப் 17, 2026 09:31 AM
ADDED : பிப் 17, 2026 08:50 AM

ஊட்டி: நீலகிரியில் இதுவரை, 900 கட்டட உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ள நிலையில், 75 கட்டடங்களுக்கு ' சீல் ' வைக்கப் பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் கடந்த, 1993ல் 'மாஸ்டர் பிளான்' கொண்டு வரப்பட்டு, பெருகி வரும் கட்டடங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், விதிகளை மீறியும், அனுமதியில்லாமலும் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இதனை கட்டடம் கட்டும் போதே தடுக்க வேண்டிய அதிகாரிகள், அவை முழுமை பெற்ற பின்பு, ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன.
கோர்ட் அதிரடி உத்தரவு
இந்நிலையில், 'நீலகிரியில் விதி மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் கமிட்டி அமைத்து கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக ' சீல் ' வைக்க வேண்டும்,' என, ஐகோர்ட் உத்தரவிட்டது.
தொடர்ந்து , மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் , நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். அதில், 'கட்டட வரைபட அனுமதி பெறாதது; அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பரப்பளவில் கட்டடம் கட்டுதல்; சுற்றுச்சூழல் விதிகளுக்கு புறம்பான கட்டுமான பணிகள் மற்றும் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி , சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு ' நோட்டீஸ் ' அனுப்பி நடவடிக்கை எடுக்கும் பணி நடந்து வருகிறது.
900 கட்டடங்களுக்கு ' நோட்டீஸ் '
இது குறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரியில் விதி மீறிய கட்டடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியதில், பல்வேறு, விதிமீறல்களின் கீழ், 900 கட்டட உரிமையாளர்களுக்கு' நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இது வரை, 75 கட்டடங்களுக்கு சீல் ' வைக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் பெற்ற சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் முறையான ஆவணங்களை மாவட்ட கமிட்டியிடம் சமர்பித்தால் பரிசீலிக்கப்பட்டு முறையாக இருந்தால், நோட்டீஸ் திரும்ப பெறப்படும். விதிமீறல் உள்ள கட்டடங்களுக்கு படிப்படியாக ' சீல் ' வைக்கப்பட்டு வருகிறது. ' சீல் ' வைத்த பின்பும், விதி மீறலில் ஈடுபட்டவர்கள் சிலர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சீல் வைத்த கட்டடங்களில் மீண்டும் பணி நடப்பது குறித்து கண்காணிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமீறிய கட்டடங்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

