/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போலியோ சொட்டு மருந்து 777 மையங்கள் தயார்: 59 ஆயிரம் குழந்தைகளுக்கு இலக்கு
/
போலியோ சொட்டு மருந்து 777 மையங்கள் தயார்: 59 ஆயிரம் குழந்தைகளுக்கு இலக்கு
போலியோ சொட்டு மருந்து 777 மையங்கள் தயார்: 59 ஆயிரம் குழந்தைகளுக்கு இலக்கு
போலியோ சொட்டு மருந்து 777 மையங்கள் தயார்: 59 ஆயிரம் குழந்தைகளுக்கு இலக்கு
ADDED : மார் 01, 2024 12:04 AM
ஊட்டி;நீலகிரியில், போலியோ சொட்டு மருந்து வழங்க, 777 மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதார துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இம்மாதம், 3 ம் தேதி நடக்கிறது.
இதை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் அருணா தலைமை தாங்கி முகாம் ஏற்பாடுகளை சரியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:
நீலகிரியில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள் ஆகிய இடங்களில். 3ம் தேதி நடக்கிறது.
மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகள், குடிசைப்பகுதிகள், பணிநிமித்தமாக இடம் பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
பணியில்,3,108 பேர்
இந்த தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில், 5 வயதிற்கு உட்பட்ட, 59 ஆயிரத்து 132 குழந்தைகள் பயன்பெறும் வகையில், 777 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க தேவையான நடவடிக்கைகள், முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளை சார்ந்த 3,108 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் வடமாநில தொழிலாளிகள் உள்ள தேயிலை தோட்டங்களில் குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகளை கண்டறிந்து, அடுத்து வரும் இரண்டு நாட்களில் இந்த பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று பார்வையிட்டு, சொட்டு மருந்து வழங்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

