தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மலை மாவட்டத்தில் 80 வது சுதந்திர தின உற்சாகம்

மலை மாவட்டத்தில் 80 வது சுதந்திர தின உற்சாகம்

மலை மாவட்டத்தில் 80 வது சுதந்திர தின உற்சாகம்


ADDED : ஆக 16, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மிடுக்கு நிறைந்த போலீஸ் அணி வகுப்பு; மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி

ஊட்டி:

நீலகிரி மாவட்ட வருவாய் துறை சார்பில், 80 வது சுதந்திர தின நிகழ்ச்சியை ஒட்டி, பள்ளி மாணவ, மாணவிகளின் தேசப்பற்றை கலை நிகழ்ச்சிகளாக வெளிப்படுத்தியும், போலீசாரின் கம்பீர அணிவகுப்புடன், தேசிய கொடி பட்டொளி வீசி பறக்க ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 80 வது சுதந்திர தினவிழா ஒட்டி, காலை 10:00 மணிக்கு கலெக்டர் லட்சுமி பவ்யா தேசிய கொடியேற்றினார். மாவட்ட எஸ்.பி., பிருந்தா உடனிருந்தார். தொடர்ந்து, போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொண்டார். இந்த அணி வகுப்பில் போலீசார், ஊர்காவல் படை, தீயணைப்புத்துறை, பள்ளி மற்றும் கல்லூரி என்.சி.சி., மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

நலத்திட்ட உதவிகள்

மகளிர் திட்டம், முன்னோடி வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட சமூக நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 16 பயனாளிகளுக்கு, 97 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, குழந்தை திருமண தடுப்பு, போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம் பெற்றது. விழாவில் தோடர், கோத்தர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சிகள் மற்றும் அணி வகுப்பில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலர் வாசுகி உட்பட அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

பள்ளிகளில் கோலாகலம்

* பந்தலூர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகரன் தலைமையில், தேசிய கொடி ஏற்றி வைத்து, மரக்கன்றுகளை நடவு செய்தார். வக்கீல்கள் சிவசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

* தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பி.டி.ஏ., தலைவர் ராமசந்திரன் கொடியேற்றினார். தலைமையாசிரியை பார்வதி, ஆசிரியர்கள் செவனன், பீமன் பங்கேற்றனர்.

* மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சியை ஒட்டி மாரத்தான் போட்டி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஆனந்த், என்.சி.சி., அலுவலர் சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

* அருவங்காடு உதயம் நகர் பகுதியில் நடந்த சுதந்திர தின விழாவில், தலைவர் பாலகிருஷ்ணன் தேசிய கொடியேற்றினார். செயலாளர் ஜெயராமன் பங்கேற்றனர்.

* ஊட்டி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., போஜராஜன் பங்கேற்று தேசிய கொடியேற்றினார். மாவட்ட தலைவர் தருமன், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us