/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுமி பலி
/
சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுமி பலி
ADDED : அக் 19, 2024 09:52 PM

வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறை அருகே, ஊசிமலை மட்டம் எஸ்டேட் உள்ளது. இங்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அய்னுார் அன்சாரி, நசீரன்கத்துான் தம்பதி குடும்பத்துடன் தங்கி பணியாற்றினர். இவர்கள் மகள் அப்சர்கத்துான், 4, நேற்று மதியம், 2:30 மணிக்கு வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை, சிறுமியை கவ்விச் சென்றது.
குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த தொழிலாளர்கள், தேயிலை செடிக்குள் குழந்தையை தேடினர். அப்போது, கழுத்துப் பகுதியில் காயத்துடன் குழந்தை இறந்து கிடந்தது. குழந்தையின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறையினர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறுத்தையை பிடிக்க வனத்துறை சிறப்புக்குழுவை நியமித்துள்ளது.