ADDED : ஆக 02, 2026 06:07 AM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லுாரி வளாகத்துக்கு வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே உள்ள வெலிங்டன் பாதுகாப்பு படை ராணுவ பயிற்சி கல்லுாரி வளாகத்திற்குள் கரடி புகுந்தது. அங்கிருந்த கம்பத்தை பிடித்து நீண்ட நேரம் விளையாடி உள்ளது.
இந்த காட்சியை அங்கிருந்த சிலர் 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். கரடியின் விளையாட்டு வைரலாகி வருகிறது.
