/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கதவுகளை உடைக்கும் கரடி; அச்சத்தில் கிராம மக்கள்
/
கதவுகளை உடைக்கும் கரடி; அச்சத்தில் கிராம மக்கள்
ADDED : அக் 10, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுார் காட்டேரி அருகே இரவில் வீடுகளின் கதவுகளை உடைக்கும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னுார் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குன்னுார் காட்டேரி அருகே போயர் காலனி குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த, 3 நாட்களாக இரவு நேரத்தில் வரும் கரடிகள் சில வீடுகளின் கதவுகளை உடைத்துள்ளது. நேற்று சமையலறை கதவுகளை உடைத்து உள்ளே இருந்த எண்ணெய் மற்றும் சமையல் பொருட்களை உட்கொண்டு சென்றுள்ளது. வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.