ADDED : டிச 17, 2024 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் அருகே பேரட்டி பகுதியில், காயமடைந்து உயிருக்கு போராடிய காட்டெருமை உயிரிழந்தது.
குன்னுார் பேரட்டி செல்லும் சாலையில் நடமாட முடியாமல் காட்டெருமை அவதிப்பட்டது. அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி கொடுத்ததுடன், வனத்துறைக்கும் தகவல் அளித்தனர். கட்டப்பெட்டு வனச்சரகர் செல்வகுமார் உத்தரவின் பேரில், ஆய்வு செய்த வனத்துறையினர் கால்நடை டாக்டரை வரவழைத்து ஊசி மூலம் மருந்து செலுத்த நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் நேற்று உயிரிழந்தது.