/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'செப்டிக் டேங்கில்' விழுந்த காட்டெருமை பத்திரமாக மீட்பு
/
'செப்டிக் டேங்கில்' விழுந்த காட்டெருமை பத்திரமாக மீட்பு
'செப்டிக் டேங்கில்' விழுந்த காட்டெருமை பத்திரமாக மீட்பு
'செப்டிக் டேங்கில்' விழுந்த காட்டெருமை பத்திரமாக மீட்பு
ADDED : அக் 15, 2024 10:04 PM

கோத்தகிரி :
கோத்தகிரியில் செப்டிக் டேங்கில் தவறி விழுந்த காட்டெருமையை, வனத்துறையினர் மீட்டனர்.
கோத்தகிரி போலீஸ் குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான செப்டிக் டேங்கில் நேற்று மாலை காட்டெருமை தவறி விழுந்து, கால்கள் குழியில் சிக்கிய நிலையில், வெளியில் வர முடியாமல் தவித்துள்ளது.
மக்கள் கொடுத்த தகவலின் படி, ஏ.சி.எப்., மணிமாறன், கோத்தகிரி ரேஞ்சர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில், வனவர்கள் முருகன், மெய்யப்பசாமி, வன காவலர் ராஜேஷ் மற்றும் வனக்காப்பாளர் தர்மராஜ் உட்பட வனத்துறை ஊழியர்கள் அப்பகுதிக்கு வந்தனர்.
கொட்டும் மழையிலும், டாங்கில் விழுந்த காட்டெருமையை இரண்டு மணி நேரம் போராடி, காயத்துடன் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, அருகில் உள்ள வனப்பகுதிக்கு காட்டெருமை விரட்டப்பட்டது.