/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மனிதர்களை தாக்கும் கருங்குரங்கு; பிடிக்கும் முயற்சியில் வனத்துறை
/
மனிதர்களை தாக்கும் கருங்குரங்கு; பிடிக்கும் முயற்சியில் வனத்துறை
மனிதர்களை தாக்கும் கருங்குரங்கு; பிடிக்கும் முயற்சியில் வனத்துறை
மனிதர்களை தாக்கும் கருங்குரங்கு; பிடிக்கும் முயற்சியில் வனத்துறை
ADDED : பிப் 07, 2024 10:45 PM
பந்தலுார் : பந்தலுார் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் மேலாளர் பங்களா அருகே இரண்டு கருங்குரங்குகள் முகாமிட்டு உள்ளது. ஒரு குரங்கு மனிதர்கள் பார்த்தால் துரத்தி கடிக்கிறது.
அதில், கனகரத்தினம் என்பவர் காலில் கருங்குரங்கு கடித்ததில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதிக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களை துரத்தியதால், வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர், அப்பகுதியில் கூண்டுகள் வைத்து அதனுள் கருங்குரங்கு உட்கொள்ளும் பழங்களை வைத்து, பிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வனத்துறை கூறுகையில், 'இந்த பகுதியில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும்போது தனியாக செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்புடன் செல்ல வேண்டும்,' என்றனர்.