/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குண்டும், குழியுமாக நெடுஞ்சாலை; ஜல்லியை மட்டும் கொட்டும் பணி
/
குண்டும், குழியுமாக நெடுஞ்சாலை; ஜல்லியை மட்டும் கொட்டும் பணி
குண்டும், குழியுமாக நெடுஞ்சாலை; ஜல்லியை மட்டும் கொட்டும் பணி
குண்டும், குழியுமாக நெடுஞ்சாலை; ஜல்லியை மட்டும் கொட்டும் பணி
ADDED : நவ 08, 2024 10:43 PM

பந்தலுார் ; பந்தலுார் பஜார் மற்றும் அதனை ஒட்டிய சாலையில் உள்ள குழிகளில், ஜல்லி கற்களை மட்டும் கொட்டும் பணியில், நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பந்தலுார் மற்றும் கூடலுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள், நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலைகளில், தமிழக, கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசு மற்றும் தனியார் வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில், இந்த சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறி உள்ளன. இவற்றை சீரமைக்க பல்வேறு தரப்பினரும், தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நெடுஞ்சாலை துறையினர், 'தார் இல்லை' என்ற காரணத்தை கூறி, சாலைகளில் பாறை துகள்களை அவ்வப்போது கொட்டி வந்தனர். மழையின் போது அவை அடித்து செல்லப்பட்ட நிலையில், மீண்டும் சாலையில் உள்ள குழிகளில் ஜல்லிகற்களை கொட்டி வைத்துள்ளனர். இதனால், வேகமாக செல்லும் வாகனங்களில் பிரேக் பிடித்தால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இப்பகுதியில், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைத்தடுமாறி விழுவதும்அதிகரித்து வருகிறது. உள்ளூர் மக்கள் கூறுகையில், 'அரசு நிதியை வீணாக்காமல் சேதமடைந்த சாலைகளை முறையாக மற்றும் தரமாக சீரமைக்க நெடுஞ்சாலை துறை முன் வர வேண்டியது அவசியம்,' என்றனர்.